2026 F&M குளோபல் பாரோமீட்டர்ஸ் LGBTQI+ பெர்சப்ஷன் இண்டக்ஸ் (Perception Index) கருத்தாய்வு
2026 F&M குளோபல் பாரோமீட்டர்ஸ் LGBTQI+ மனித உரிமைகள் குறித்த பெர்சப்ஷன் இண்டக்ஸ் (Perception Index) கருத்தாய்வுக்கு வரவேற்கிறோம்!
இந்தக் கருத்தாய்வு LGBTQI+ என அடையாளம் காணப்படும் நபர்களுக்கானது, இதில் பெண் ஓரினச்சேர்க்கையாளர் (லெஸ்பியன்), ஆண் ஓரினச்சேர்க்கையாளர் (ஃகே), ஓரினச்சேர்க்கையாளர் (ஹோமோசெக்ஸுவல்), இருபாலினச் சேர்க்கையாளர் (பைசெக்ஸுவல்), திருநங்கை (டிரான்ஸ்ஜெண்டர்), வினோதமான பாலுறவில் நாட்டம் கொண்டர் (குயீர்) மற்றும்/அல்லது இடைப்பால் (இன்டர்செக்ஸ்) அடையாளங்களைக் கொண்டவர்களும் உள்ளடங்குவர். இதைப் பூர்த்தி செய்ய 2 முதல் 5 நிமிடங்கள் ஆகும். அனைத்துக் கருத்தாய்வு பதில்களும், மிக உயர்ந்த சர்வதேச ஆராய்ச்சித் தரநிலைகளின்படி, முழுமையாக ரகசியமானவை மற்றும் பெயரடையாளம் குறிப்பிடப்படாதவை ஆகும்.
F&M குளோபல் பாரோமீட்டர்ஸ் ஆகிய நாங்கள், உங்கள் நாட்டில் ஒரு LGBTQI+ நபராக உங்கள் மனித உரிமைகள் அனுபவங்களை நீங்கள் பிரதிபலிக்க வேண்டுமென்று விரும்புகிறோம். உங்கள் பதில்கள் காலப்போக்கில் உலகளாவிய LGBTQI+ மனித உரிமைகளில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொள்ள எங்களுக்கு உதவும். உங்கள் கேள்விகள் அல்லது சந்தேகங்களை F&M குளோபல் பாரோமீட்டர்ஸில் முதன்மை ஆராய்ச்சியாளராக உள்ள டாக்டர் சூசன் டிக்லிட்ச்-நெல்சன்ஸ் அவர்களுக்கு gbgr@fandm.edu என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்புங்கள்.
எங்கள் கருத்தகாய்வாய் ஃப்ராங்க்ளின் & மார்ஷல் கல்லூரி நிறுவன மறுஆய்வு வாரியம் (IRB) மதிப்பாய்வு செய்து அங்கீகரித்துள்ளது. தகவலறிந்த ஒப்புதலை இங்கே காணலாம். இந்தக் கருத்தாய்வில் ஒரு பங்கேற்பாளராக உங்கள் உரிமைகள் தொடர்பான கேள்விகளை தற்போதைய IRB தலைவருக்கு irb@fandm.edu என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்பலாம்.